இன்றைய ராசி பலன் – 11-03-2018

மேஷம்:
mesham
உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.

ரிஷபம்:
rishabam
தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சிலருக்குக் காலையிலேயே குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகப் பணிகளை வீட்டில் செய்ய நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம்:
Midhunam
எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு பிள்ளைகளால் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். வீட்டுப் பராமரிப்புப் பணிகள் அதிகரித்தாலும் அலுத்துக்கொள்ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

கடகம் :
Kadagam
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. கூடுமானவரை வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்துவிடவும். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

சிம்மம்:
simam
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், நண்பர்களின் சந்திப்பு ஆறுதல் தரும். வெளியில் செல்லும்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

துலாம்:

பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி இருக்கும்.. உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மன உறுதியுடன் முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பில்லை. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

விருச்சிகம்:

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் பணிந்து வருவார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடை தாமதம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதில் குடும்பத்தினரின் ஆலோசனை அவசியம். உறவினர்கள் வருகையால் வீட்டில் பொறுப்புகள் அதிகரிப்பதால் சற்றே சோர்வு உண்டாகும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

தனுசு:

பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். தேவையான பணம் கையில் இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைக் கண்டிப் பாகத் தவிர்க்கவும். சிலருக்கு பிள்ளைகள் வகையில் சங்கடம் ஏற்படக்கூடும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

Advertisement

மகரம்:
magaram
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கவனமாக இருக்கவும்.

கும்பம்:

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

மீனம்:

அனுகூலமான நாளாக இருக்கும்.வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். சிலருக்குத் தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.