Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 11-03-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். ஆனாலும், அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பேசும்போது பதற்றம் வேண்டாம். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். மாலையில் நீண்டநாள்களாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi

சிலருக்குத் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உற்சாகம் தருவதாக அமையும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

இன்று உற்சாகமான நாளாக அமையும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். கணவன் – மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
virichigam

உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்கு இன்றைய ராசி பலன் படிவெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மீனம்:
meenam

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -