Rasi palan : இன்றைய ராசி பலன் – 11-05-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. பிற்பகல் வரை பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தாமதம் ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படுகிறது. உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு

விருச்சிகம்:
virichigam

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மகரம்:
Magaram rasi

மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்:
meenam

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பேச்சில் நிதானம் தேவை. ரேவதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -