Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (11/06/2019): சிலர் வெளியூர் பயணம் செல்ல நேரும்.

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், விறுவிறுப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து அதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் நண்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்ச்சிகள் எடுக்கவேண்டாம். சிலர் புதிய புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். இன்று உறவினர்கள் வகையில் நண்மை உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

கடகம்:
Kadagam Rasi

உங்கள் மனைவியின் வழி உறவுகளிடம் இருந்து எதிர் பார்த்த காரியம் கை கூடும். வியாபாரத்தில் இன்று முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு வேளைகளில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு அதிகாரிகள் பாராட்டுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. பிற்பகல்வரை வேலைச்சுமை இருந்தபடி இருக்கும்.. மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள்.

கன்னி:
Kanni Rasi

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்கு இன்றைய ராசி பலன் படி அலுவலகத்தில் பணிச் சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவுவார்கள். இன்று புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம். சிலர்க்கு வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பண வரவு கிட்டும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடும்

மகரம்:
Magaram rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதி தாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மை கள் நடக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்:
meenam

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -