இன்றைய ராசி பலன் – 11-09-2020

rasi palan - 11-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடைபெறக் கூடிய சிறப்பான அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். பைரவரை வழிபடுவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும் இனிய நாளாக அமைய இருப்பதால் நன்மையே உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க சக நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வணங்கி வாருங்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை செய்ய நினைப்பவர்கள் காலதாமதமான பலன்களை பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் மூலம் தக்க சமயத்தில் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலைத்து இருக்கும். ஈசனை வணங்கி வர மன நிம்மதி பிறக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கஷ்டங்களெல்லாம் தீர கூடிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் ராசிப்படி இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்க கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகிறது. பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்கும் துணிச்சல் பிறக்கும். வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வாருங்கள்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தைத் தரும் அமைப்பாக இருப்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்களை பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாத சிலர் புரிந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். சிவ வழிபாடு செய்ய நன்மை பிறக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைய கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. கடன் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். சனி பகவான் வழிபாடு செய்து வருவது நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய தெம்பு பிறக்கும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையலாம். எதிர்பாராத வங்கிக்கடன் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும்.நண்பர்களுடன் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பிறகு மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பார்வதி தேவியை வணங்குவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய இனிய நாளாக அமையும். குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகையால் குதூகலம் காணப்படும்.புதிய தொழில் தொடங்குபவர்கள் பலரின் ஆலோசனை கேட்டு தொடங்குவது நல்லது.தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பொருளாதார நிலை ஒரளவுக்கு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள் மன நிம்மதி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பு என்பதால் மகிழ்ச்சிகரமான இனிய நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். சுபகாரியங்கள் கைகூடி வரும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டு. பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டு. ராகு பகவானை வணங்கி வாருங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களின் வேடிக்கையான குணத்தினால் பலரின் மனதை கவர்ந்து விடுவீர்கள். உத்யோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். முருக வழிபாடு செய்வது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரை இருக்கின்ற அத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாக கூடும். தேவையற்ற வாக்குவாதங்கள் இன்றைய நாளில் நீங்கள் தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நலம் தரும். சுக்கிர பகவானை வழிபடுவது ஏற்றம் தரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். எதிர்பாராத நபர்களின் மூலம் புதிய முயற்சிகள் முன்னெடுக்க கூடிய வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். உடல் உபாதைகள் ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. துர்க்கை அம்மனை வழிபட நன்மை பிறக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -