இன்றைய ராசி பலன் – 11-1-2020

rasi palan - 11-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட நேரிடும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருப்பதால் இன்றைய நாளை சிறப்பாக்கி தரும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் பேசும் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் தற்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. வியாபாரம் விருத்தி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் அடைய கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இடமாற்றம் வீடு மாற்றம் போன்றவை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள். மாணவர்கள் பல சாதனைகளை புரிவதற்குரிய நல்ல நேரம் அமையும். வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சுபகாரியப் பேச்சுகளை தள்ளிவைப்பது நல்லது. குடும்பர்த்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு பொருள் மாற்றம் உண்டாக கூடிய சூழ்நிலை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். ஊதிய உயர்வு போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்கள் விசா தொடர்பான காரியங்களில் நற்செய்தி கிடைக்கப் பெறுவார்கள். நேர விரயத்தை தவிர்ப்பது மன மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்காலம் பற்றிய பயத்தை உருவாக்கும் சூழ்நிலை ஏற்படலாம். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் நீங்கள் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உயர்கல்வியில் பயில்வோருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக மனசோர்வு உண்டாகக்கூடும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் காலதாமதம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய மாற்றங்களை செய்து முன்னேற்றம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் நல்ல முன்னேற்றம் உண்டாகக்கூடும். வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்தோருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் மேல்நிலை பெறுவார்கள். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனை தீரும். உங்களை நம்பி ஒப்படைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர்கல்வி பயில்வோருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கும். தடைபட்டிருந்த திருமண செய்திகள் கைகூடி வரும். வேலைவாய்ப்பிற்காக காத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு உங்கள் மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை இருப்பதால் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். இறைவழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவும். சுபகாரிய முயற்சிகள் தாமதமானாலும் வெற்றி கிட்டும். மன தைரியத்துடன் செயல்பட வேண்டிய காலமிது. தொலைதூரப் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்த்து திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம். புதிய தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். உயர்கல்வி பயில்வோருக்கு புதிய பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் விடாமுயற்சி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும். குடும்ப நபர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்கால பயம் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. மன தைரியத்துடன் இருப்பது நல்லது. திருமண பேச்சு வார்த்தையில் கால தாமதம் ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும் இனிய நாளாக இருக்கும். நீண்டநாள் தடைபட்டிருந்த விஷயங்கள் விரைவில் முடிவுக்கு வரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். பூர்வீக பிரச்சனை தீர்வு பெறும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளை கையாளுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தாமதமானாலும் சுபமாக முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இனிய நாளாக இருக்கும். பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட நேரிடும். பணியிட மாற்றம், வீடு மாற்றம் போன்றவை உருவாகலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் ஆதாயம் பெறுவீர்கள். பெண்களுக்கு சிறந்த தினமாக அமைந்திருக்கிறது. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். தன வரவு திருப்திகரமாக இருக்கும். சுபகாரியங்களில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார பிரச்சினைகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். கடின முயற்சிக்குரிய பலன் கிட்டும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குழந்தை வரம் எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கல்வியில் மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கல்விக்காக செலவுகள் செய்ய நேரிடலாம். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலில் உயர் நிலை பெறுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.