இன்றைய ராசி பலன் – 11-11-2020

Rasi-palan

மேஷம்
Mesham Rasi

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடும். தந்தையுடன் இருந்து வந்த பிணக்குகள் தீருவதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும். தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பண விவகாரங்களில் முன்னெச்சரிக்கை அவசியம்.

ரிஷபம்
Taurus zodiac sign

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். ஒரு சிலர் குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

உற்சாகமான நாளாக அமையும். இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவி இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும்.

சிம்மம்
Leo zodiac sign

வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பாராத பண வரவும் உண்டு. பெண்கள் வழியில் நன்மைகள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டு. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தாய்வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
kanni

மிக உற்சாகம் தருகின்ற நாளாக இருக்கும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

துலாம்
Thulam Rasi

அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும். குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

சிலருக்கு அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும், மனக் கசப்பும் உண்டாகும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத லாபங்கள் உண்டாகும்.

தனுசு
dhanusu

உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. பிற்பகலுக்கு மேல் பிறருடனான எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும் உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலர் மாலையில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டு.

மகரம்
Magaram rasi

இன்று உற்சாகமான நாளாக அமையும். பிற்பகலுக்கு மேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வெளியூரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் சுபச் செய்தி வந்து சேரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உடல்நலத்தில் அக்கறை தேவை. பிற்பகலுக்கு மேல் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். குழந்தைகள், வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்
meenam

இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணம் போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.