இன்றைய ராசி பலன் – 11-12-2020

rasi palan - 11-12-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமையப் போகின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொடங்கும் முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். தொழில் ரீதியான விஷயத்தில் போட்டிகள் வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் முக்கியமாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் வார்த்தையில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சுயதொழில் புரிபவர்கள் லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் தொடரும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சுயதொழில் புரிபவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும் வாய்ப்புகள் உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகளில் ஏற்பட்டாலும் பின் ஒற்றுமை நீடிக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக அமையும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். ஒரு சிலருக்கு அரசாங்க ரீதியான காரியங்கள் சுமூகமாக முடியும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபநிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செலவுகள் திடீரென வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயத்தில் சில செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் விரிசல் நீங்கி ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது உத்தமம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சமூகத்தின் மீதான உங்களுடைய அக்கரை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்க கூடிய நாளாக அமையும். பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான விஷயத்தில் அனுகூல பலன்கள் உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காவிட்டாலும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு நீங்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் மற்றும் பின் மன சஞ்சலங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் இருந்து வந்த சிறுசிறு சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் விவாதங்கள் மூலம் வீண் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் மௌனம் காப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளால் சிறுசிறு செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறைவழிபாடுகள் மூலம் மன அமைதி பெறலாம். பெண்களுக்கு நினைப்பதெல்லாம் நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் உண்டு. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்து அங்கீகாரம் கிடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -