இன்றைய ராசி பலன் – 11-2-2020

rasi palan - 11-2-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். புதியவர்களின் அறிமுகம் வளர்ச்சி பாதைக்கு உதவும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். பொருளாதாரப் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கல்வி தொடர்பான விஷயங்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு திருமண யோகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணிகளில் உள்ள சிக்கல்களை திறம்பட தீர்ப்பீர்கள். சக பணியாளர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபார விருத்தி ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களின் கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது பிரச்சனைகளை தவிர்க்க வழிவகுக்கும். சகோதர, சகோதரிகளின் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான ஒரு நாளாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. புதிய வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வாகன வகையில் சில பிரச்சனைகள் உருவாகலாம். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் சுமூகமான சூழ்நிலை நிலவும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் பிள்ளைகள் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் சோர்வடையும். தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியமாக இருக்கும். கூட்டு தொழில் புரிபவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்கும். முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். அதனை பயன்படுத்துவதன் மூலம் வெற்றி காணலாம். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். இறை வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் கடின முயற்சியால் வெற்றிகள் குவியும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் காலதாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும். கூட்டு முயற்சிகள் பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. வீண் அலைச்சல்களால் மன சோர்வு உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். புதிய மாற்றங்கள் செய்து முன்னேற்றம் காணலாம். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய சவால்கள் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவது நல்லது. தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்துவது நல்லது. தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முதுகு வலி காரணமாக அவதிப்பட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். வியாபார விருத்திக்கு புதிய வாய்ப்புகளை தேடிச் செல்லலாம். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு வேலை வாய்ப்புகளுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். முதுகு, முதுகு தண்டுவடம் போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் ஆர்வம் தேவை. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நல்ல வாய்ப்புகளை பெற்று முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். வழக்கு தொடர்பானவற்றில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படலாம். தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நபர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் புதிய சவால்களை எதிர்கொள்வீர்கள். உங்களைப் பற்றி நீங்களே புரிந்து கொள்ளும் ஒரு இனிய நாளாக இன்றைய நாள் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம்:
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாக பெறும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெண்களுக்கு நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். தொலைதூர பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக் கூடிய ஒரு நாளாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். சக பணியாளர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. பெண்களுக்கு வாகன யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். புதிய தொழில்நுட்பங்களை வாங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. வழக்கு தொடர்பானவற்றில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டு. திடீர் தனவரவு உண்டாகி திருப்திகரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -