இன்றைய ராசி பலன் – 11-4-2020

rasi palan - 11-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமாக அமைய போகிறது. நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியில் முடியும். குடும்பத்தில் உள்ள இளைய சகோதரர்களுடனும் ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாளாக அமைய போகிறது. ஆடை ஆபரண சேர்க்கை சேர்வதற்கு வழி உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். நிர்வாகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறந்த நல்ல நாளாக அமைய போகிறது. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள். மாணவர்களின் கல்வித் திறன் நன்றாக வெளிப்படும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய போகிறது. புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர்கல்வி படிக்க கூடியவர்களுக்கு முன்னேற்றமான ஒரு நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள முத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். நிருவாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக அமைய போகிறது. காதல் தொடர்பில் ஈடுபட்டவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும். சுபசெலவுகள் கைமீறி செல்லும். சிக்கனத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள் வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தருவதாக அமையும். அரசு தொடர்பான வேலைகள் முடிவடையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகள் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் ஏற்றம் கிடைக்கும் நல்ல நாளாகும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாய் நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள். இன்றைய நாளில் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். நண்பர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரலாம்.வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கித் திரும்பி வருவதற்கான மன நிலைக்குத் திரும்புவார்கள். குழந்தைகளின் கல்வி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாயின் உடல் நிலையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். அரசு துறையில் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் முடிவடையும் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் நன்மை தருவதாக அமையும். மாணவர்களின் கல்வி மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாகவே இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது அலைச்சல்கள் ஏற்படலாம். உயர்கல்விக்காக பிரயாணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்க கூடும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது நிகழ்வுகள் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி நிலை நன்றாகவே இருக்கும். கல்வி முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் பேச்சிற்கு மரியாதை கொடுப்பது மிகவும் நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக அமையும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல்நலம் நன்றாக இருந்து வரும். நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். பண வரவு உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உயர்கல்விக்காக பிரயாணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். மனைவிவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். எதிலும் நிதானமாக இருப்பது மிகவும் நல்லது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்பட கூடும். ஒரு சிலருக்கு மொபைல் போன் கம்ப்யூட்டர் போன்றவை வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. பத்திரிக்கை துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக அமையும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது நிதானமாக இருப்பது மிகவும் நல்லது. மனைவியின் வார்த்தைக்கு மரியாதை கொடுப்பது மிகவும் நல்லது. நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறப்பான நாளாக அமைய போகிறது. வெளிநாடு செல்வதற்கு பலருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.