இன்றைய ராசி பலன் – 11-5-2020

rasi palan - 11-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். எதிர்பாராத பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு உத்தியோகம் கைகூடிவரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கனவு நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம் தெய்வீக அனுகூலம் கிடைக்கும். உங்களிடம் பகையாக இருந்தவர்கள் நல்ல நண்பர்களாக மாறலாம். நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய வேலையாட்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாக அமையக்கூடும். நண்பர்களை சந்திக்க நிகழும்.எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையாளர்களின் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.உத்தியோகத்தில் அதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்.எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் பாசத்தை காட்டுவார்கள். அரசாங்க உத்தியோகத்தர் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சிறிய மனஸ்தாபம் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் அதிகம் கவனம் தேவை. சொந்த தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். வீடு கட்டுவது போன்ற அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு உகந்த நாள். எடுத்த காரியத்தில் தடங்கல் ஏற்பட்டாலும் அதை முடித்துக் காட்டுவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பழைய பாக்கி கடன்களை சுலபமாக பேசி வசூலிப்பீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். திருமணத் தடை நீங்கும். நீங்கள் மனத் துணிச்சலுடன் இருப்பீர்கள். இடமாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை யாரிடம் சொல்வது என்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும். வீட்டு மனை வாங்குவது விற்பது போன்ற முயற்சியில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி அடைவீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும். செய்யும் வேலையில் தடைகள் ஏற்பட்டாலும் அதை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் சிறு மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மதிப்பும் மரியாதையும் கூடும் நாள். வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வீண் செலவுகள் அதிகரித்தாலும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். பெற்றோரிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடுமையான செயல்படுவதாக லாபம் அதிகரிக்க கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய மாற்றங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் மூலம் பண உதவி கிடைக்க கூடும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை.மேல் படிப்பு படிப்பதற்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளது. மற்றவரிடம் பேசும்போது பொறுமையுடன் பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களால் சிறிது மனக்கசப்பு ஏற்பட கூடும். வியாபாரத்தில் வியாபாரிகளிடம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய திருப்பங்கள் ஏற்பட கூடும்.கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கக்கூடும்.கொடுத்த கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வழக்கம்போலவே இருக்கும். அரசாங்க உத்தியோகம் கைகூடும். திருமணம் தடை நீங்கி நல்ல வரன் அமைய கூடும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு திறமைகள் வெளிப்படும் நாள். எடுத்த காரியங்கள் அனைத்தையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கக்கூடும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கக்கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிறிது அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.