இன்றைய ராசி பலன் – 12-04-2018

12-rasi
- Advertisement -

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி சற்று தாமதமாகக் கிடைக்கும். மாலையில் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சிறந்த நாள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
இன்று எதிலும் பொறுமை தேவை. தந்தையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் சற்றுத் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.

மிதுனம்:

Mithunam Rasi
மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கினால் சாதகமாக முடியும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.. தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வீண் அலைச்சலையும் வீண் விவாதங்களையும் தவிர்க்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப் படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சிம்மம்:

simmam
கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

உங்கள் ராசிக்கான 2018 தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

துலாம்:

Thulam Rasi
வீண் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழக் கூடும்.

விருச்சிகம்:

virichigam
வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றபடி பிரச்னை இல்லை. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு:

Dhanusu Rasi
அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய யோசனைக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சுமார்தான். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்:

Magaram rasi
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கும்பம்:

Kumbam Rasi
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூர்க் கோயில்களை தரிசிக்கவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பின் காரணமாக விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

Meenam Rasi
உற்சாகமான நாளாக அமையும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாள்களாகப் பார்க்காமல் இருந்த தாயைப் பார்க்கவும், அவருடைய தேவையை நிறைவேற்றவும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்தாலும், பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -