மேஷம்:
சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படக்கூடும்.
மிதுனம்:
புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். கொடுத்த கடன் திரும்ப வரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.
கடகம்:
சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் செல்ல நேரிடும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
சிம்மம்:
தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
கன்னி:
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் பெருமை உண்டாகும்.
துலாம்:
மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்:
மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு:
இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்குமேல் வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
மகரம்:
இன்று உற்சாகமான நாளாக அமையும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.
- Advertisement -
கும்பம்:
சகோதரர்களால் நன்மை ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
மீனம்:
எதிலும் சற்று கவனமாக இருக்கவும். முக்கிய பிரமுகர்களின் நட்பும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்குப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.
இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்