இன்றைய ராசி பலன் – 12-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiநேரத்துக்கு சாப்பிட முடியாது. தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.

இந்த வார ராசி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

ரிஷபம்:

Rishabam Rasiஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்:

- Advertisement -

midhunamஎதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கடகம்:

Kadagam Rasiதொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -

simmamபுதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். இன்றைய தினம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

கன்னி:

Kanni Rasiவிருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். கணவன் – மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. விசாகம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.

விருச்சிகம்:

virichigamஅன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும். நீண்டநாள்களாக நினைத்திருந்த தெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasiவியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

Magaram rasiதேவையான பணம் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும்.

கும்பம்:

Kumbam Rasiபிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

meenamகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை. மாலையில் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -