இன்றைய ராசி பலன் – 12-07-2020

rasi palan - 12-7-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ள உறவினர்களை புரிந்து கொள்வீர்கள். அனைவரையும் சந்தேக பார்வையில் பார்ப்பதால் நல்லவர்களை இழந்து விடுவீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக இருப்பது உங்களுக்கு ஆபத்தில் முடியும். உத்தியோகத்தில் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டு செயல்படுவீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய கவலைகள் வந்து சேரும். பழைய பிரச்சினைக்கு இன்று தீர்வு காண்பீர்கள். கொடுத்த கடனை நியாயமாக பேசி வசூலிக்கப் பாருங்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்த காரியத்தை தைரியமாக முடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதன்படி செயல்படுவீர்கள். உறவினர்கள் கேட்ட உதவிகளையும் செய்வீர்கள். மேலும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் வெற்றியைக் காண்பீர்கள். உறவினர்களின் வருகை உண்டு. உங்களுடைய வேலைகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைகிறது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகம் இன்று காண்பீர்கள். விநாயகரை வழிபடுவது நன்மை தரும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்று செய்யக் கூடிய செயலை திட்டமிட்டு செய்ய வேண்டிய நாள். நண்பர்கள் உங்களை இன்று உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்க கூடியவராக இருப்பீர்கள். பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் சுமுகமாக முடிவுக்கு வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு முதலிடம் இருக்கும். இன்று புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பலநாள் காத்திருக்கும் அரசு உத்தியோகம் இன்று கைகூடும். பிரிந்து போன சொந்தங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் கனவுகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரிந்துபோன நண்பர்களை சந்திக்க நேரும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயலை திட்டமிட்டபடியே சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திருமணத்திற்காக காத்திருக்கும் மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் வந்து சேரும். பயணத்தால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைகிறது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்கு பண உதவி செய்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். நீங்கள் செய்யும் தொழிலில் புது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தடைகள் நீங்கும் நாள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். புதிய நண்பர்கள் இன்று உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். வியாபாரத்தில் புது முயற்சி செய்து வெற்றியைப் பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.