இன்றைய ராசி பலன் – 12-12-2020

rasi palan - 12-12-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயத்தில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்கள் மனோதிடத்துடன் செயல்படுவது நல்ல பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தோல்வியை கண்டு மனம் தளர்ந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது உத்தமம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் புரிபவர்கள் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது முன்னேற்றத்தை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத் காரியங்கள் சுலபமாக நிறைவேறுவதை கண்டு வியந்து போவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஆதரவுடன் முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த காரியங்கள் காலதாமதத்தை கொடுத்தாலும் வெற்றியைக் காணலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நிறையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பில் இருப்பதால் புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். ஒரு சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் நீண்ட நாள் காத்துக் கொண்டிருந்த காரியங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்தால் மன அமைதி பெறலாம்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சிறந்த நாளாக அமையும். குடும்பத்தில் ஒரு சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீண்டநாள் இழுபறியில் இருந்த சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதார ஏற்றம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் சுப விரயமாக ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே தேவையில்லாத மனக் கசப்புகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் மந்த நிலை காணலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் குழப்பங்கள் நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கலாம். உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் அற்புதமான நாளாக அமையப் போகின்றது. ஒரு சிலர் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலை சிறப்பாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தையில் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியாளர்களுடன் இருந்து வந்த போட்டி பொறாமைகள் வலுவாக கூடியதை காணலாம். எதிலும் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதால் நல்ல பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு வரும் சிக்கல்களை சாமத்திய குணத்தால் முறியடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெண்கள் இதுவரை சந்தித்த வந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -