இன்றைய ராசி பலன் – 12-2-2020

rasi palan - 12-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும் ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமூகமான சூழ்நிலையை காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் மதிப்பும், மரியாதையும் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். பெண்களுக்கு உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாக கூடிய நாளாக இருக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் காலதாமதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வழியே நன்மைகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமூகமான சூழ்நிலை காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. கவனத்தை சிதற விடாமல் ஒருமுகப்படுத்துவது நல்லது. தியானம் யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் மன அமைதி கிட்டும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்மை. உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பலன்களை காணக்கூடிய நாளாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கட்டாயம் அமையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய முயற்சிகளில் லாபம் காணலாம். பங்குச்சந்தை வியாபாரத்தில் ஏற்றம் காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரம் விருத்தி உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான சூழ்நிலை உருவாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் மூலம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு. மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற கரமான நாளாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு லாபம் உண்டு. உத்தியோகம் செய்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபார விருத்தி ஏற்படுவதற்கு சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையினால் சில சங்கடங்கள் உருவாகலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் உண்டு.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற விஷயங்களை சந்திக்கக் கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் உருவாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் காணலாம். பொருளாதாரப் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு. மாணவர்களின் கல்வியில் ஏற்றம் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான ஒரு நாளாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் இனிய நாளாக இருக்கும். வாகன வகையில் சில பிரச்சனைகள் உருவாகலாம் எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் சுமூகமான சூழ்நிலை நிலவும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் பிள்ளைகள் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கும். ஒரு சிலருக்கு. திடீர் வரவு ஏற்பட்டு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வி பயில்பவர்கள் சாதனைகள் புரிவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக் கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் சமாளிப்பீர்கள். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். பைரவரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதன் மூலம் நிம்மதியை இழக்க நேரிடும் எனவே பொறுமையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகோதர, சகோதரிகளின் வழியே ஆதாயம் உண்டு.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் மதிப்பும், மரியாதையும் உயர்த்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். நிர்வாகத்தில் நற்பெயர் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்களின் கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்ற கரமான நாளாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்துடன் செயல்படக் கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சகோதர, சகோதரிகளின் வழியே நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பார்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்ற கரமான நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் லாபம் காணப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.