இன்றைய ராசி பலன் – 12-3-2020

rasi palan - 12-3-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் வேலைகளில் சிறு சிறு குறைகள் உண்டாகும். வியாபாரிகள் கவனத்துடன் இருந்தால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். விளையாட்டுகளிலும் வெற்றிவாகை சூடுவார்கள். பொருளாதார நிலைமை சுமாராகவே இருக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சூடான வார்த்தைகளை பேச வேண்டாம். இறைவழிபாட்டைப் பெருக்கிக் கொண்டால் துன்பங்கள் பனி போல் விலகி விடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். பெண்களுக்கு கணவருடனான அன்பு மேலோங்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் முழுகவனத்தைச் செலுத்துவீர்கள். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உற்றார், உறவினர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் நிலவி வந்த பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் பாராட்டி மகிழ்வார்கள்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் லாபம் பெருக புதிய யுக்திகளைக் கையாளவும். கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். தேவைக்கேற்ற பணவரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அவசியம் எனில் பயணங்களை மேற்கொள்ளவும். உற்றார், உறவினர்களுடன் சகஜமாகப் பழகவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைகளை உடனுக்குடன் முடிப்பது நல்லது. சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்காது. மேலதிகாரிகளின் அனுசரணையும் கிடைக்காது.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகள் புதிய கடன்கள் வாங்க வேண்டாம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். சிலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வர். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். சுப விரயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைக்க தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். நெடுநாள்களாக தள்ளிப்போயிருந்த காரியங்கள் நடக்கத் தொடங்கும். நண்பர்களுக்கு கேட்காமல் அறிவுரை சொல்ல வேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிரந்தர வருமானம் வரும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளிலும் ஈடுபடலாம். பெண்களுக்கு கணவரிடம் பாசம் அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் தினமும் நன்றாகப் படித்து சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானத்தில் முன்னேற்றம் தென்படும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். மேலதிகாரிகள் உங்கள் சமயோஜித புத்தியைப் பாராட்டுவார்கள்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். கூட்டாளிகளிடம் கவனமாகப் பழகவும். பெண்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தவும். ஆன்மிக பலத்தைப் பெருக்கிக் கொள்ளவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்ம பலம் பெருக, யோகா, பிராணாயாமம் செய்யவும். புதிய முயற்சிகளைத் தனித்துச் செயல்படுத்துவீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகளைக் காண்பீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகளை வெளியூர் அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவுக்கு குறைவில்லை. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்து லாபத்தை அள்ளுவீர்கள். பெண்கள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வர். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். உற்றார், உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் பிறரிடம் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரிகளுக்கு பதற்றம் நீங்கும். கூட்டாளிகளை நம்பி புதிய முதலீடுகளில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் பாடங்களைப் படித்து தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். செயல்களை சுறுசுறுப்பாகச் செய்தாலும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள். ஆனாலும் சக ஊழியர்களின் உதவியுடன் வேலைகளை முடிப்பீர்கள்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் சற்று முயற்சிக்குப் பிறகே நிறைவேறும். வியாபாரிகள் துணிந்து முதலீடுகளைச் செய்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை நம்ப வேண்டாம். பெண்கள் இல்லத்தில் நிலவும் சந்தோஷத்தால் உற்சாகம் அடைவீர்கள். பிள்ளைகளால் ஆனந்தப்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். புத்திசாலித்தனம் சற்று அதிகரிக்கும். செய்தொழிலில் இருந்த நெருக்கடிகள் மறையும். வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் ஒற்றுமை காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உழைப்புக்கேற்ற பலன் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்கள் நன்றாகவே முடியும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து தேர்வுக்கு உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். கஷ்டமான காரியங்களையும் மன தைரியத்துடன் எதிர்கொண்டு முடித்து விடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். பெயர், புகழ் உயரும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். உத்தியோகஸ்தர்களைத் தேடி பதவி உயர்வுகள் வர கடுமையாக உழைத்து நற்பெயரை எடுப்பீர்கள். சக ஊழியர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகளைத் தேடி பலவகையிலும் லாபம் வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பெண்கள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். கேளிக்கைகளிலும் விளையாட்டிலும் ஈடுபட்டு மகிழ்வீர்கள். வருமானம் வந்தாலும் செலவுகள் முந்திக்கொண்டே வரும். சற்றுச் சிக்கனத்தைக் கையாளவும். இல்லத்திற்கு நவீன உபகரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்ட வேலைகளை மிகுந்த கவனத்தோடு செய்வீர்கள். யாரையும் நம்பி எந்த வேலையும் கொடுக்கக்கூடாது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்கள் இன்றைய நாளில் மனத் தெளிவுடன் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளும் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். பெண்களுக்கு குடும்பத்தாரிடம் பாசம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடவும். பாடங்களை கவனத்துடன் படித்து தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளவும். வசீகரமாகப் பேசுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பிரச்னைகளிலிருந்து விடுபடுவார்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.