இன்றைய ராசி பலன் – 12-4-2020

rasi palan - 12-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த முன்னேற்றமான நாளாக இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு உயர்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். ஒருசிலர் வீடு வாங்குவது சொத்துக்கள் வாங்குவது அல்லது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு உயர்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைத் தரும். பெண்களுக்கு இனிமையான நாளாக அமைய போகிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். உயர் கல்வியை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றியை அளிப்பதாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவினங்களும் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை அளிக்கக் கூடியதாக இருக்கும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. கல்வியில் மேன்மையான நிலையை மாணவர்கள் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணும் நாளாக அமைய போகிறது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நன்றாக நடந்து முடியும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரத்தில் சிலசில பற்றாக்குறை ஏற்பட்டாலும் இவற்றை சரி செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேம்படும். உடல் நலத்தில் சற்று பின்னடைவுகள் இருக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது உங்களை சோர்வடைவது இருந்து பாதுகாக்கும். உயர் கல்வியை நோக்கி கல்லூரிகளில் இடத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருந்து வரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய போகிறது. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை சமாளித்து வெற்றி பெறுவார்கள். ஒரு சிலர் உயர்கல்விக்காக வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வேண்டிய வரம். கணவன் மனைவி அன்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். மாணவர்களின் கல்விநிலை சிறப்பாக இருக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் காண்பார்கள். காதல் வலையில் விழுந்தவர்கள் மகிழ்ச்சியான நிகழ்வுகளும் சந்திப்புகளும் ஏற்படும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வாகனம் வகையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாளாக அமையும்.

மகரம்
Magaram rasi

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே சென்ற காரியங்கள் வெற்றியில் முடியும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு கல்வி பற்றிய சிந்தனை மனதில் ஆட்கொள்ளும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவைகளில் தீர்வுகளையும் உடனே ஈட்டுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய போகிறது. சுபச் செலவுகள் உங்களை தேடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகமாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்தால் நன்றாக இருக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்பார்த்தபடி தன வரவு உண்டாகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு நிறைந்த காணப்படும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். உயர்நிலைக் கல்வி பயில்பவர்கள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.