இன்றைய ராசி பலன் – 12-5-2020

rasi palan - 12-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சியில் தடைகள் ஏற்படக்கூடும். கொடுத்த பழைய கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபம் அதிகரிக்க கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நல்ல வரன் அமைய கூடும்.பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் வருகையால் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் வியாபாரிகளின் பிரச்சனை ஏற்படுவதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும்.தந்தைவழி உறவினர்களால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உணவு உட்கொள்வதில் சிறிது கவனம் தேவை.எதிர்பார்த்த பணம் கிடைப்பதுடன் எதிர்பாராத திடீர் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.உறவினர்களால் ஏற்பட்ட சில சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்படவேண்டிய நாளாக அமைய போகிறது. கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் அன்னியோன்யம் அதிகரிக்க கூடும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படுவதால் சிலருக்கு கடன் வாங்கும் நிலைமை ஏற்படக்கூடும். மற்றவர்களிடம் பொறுமையாக பேசுவது நல்லது.வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்படுவதால் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே நடைபெறும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து போவதால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை பேச்சுவார்த்தை சுமுகமாக முடியக்கூடும். உறவினர்களால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். ஆடம்பர செலவுகளால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையப்போகிறது. குடும்பத்தில் உங்களுடைய பேச்சு முதலிடத்தில் இருக்கும். மனைவிவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளில் அவசரம் வேண்டாம். கொடுத்த பழைய கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களுக்கு பண உதவி செய்வீர்கள். வீடு கட்டும் முயற்சிகள் அனைத்தும் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் நாளாக அமையும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் எனக்கு முக்கியம் முடிவுகளுக்கு உங்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி செயல்படுவார்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. பெற்றோரின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதை நிறைவேற்றுவார்கள்.எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். சகோதரர்களுக்கு கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு கொடுத்த கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேல் படிப்பு படிப்பதற்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளது.வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபம் கூடுதலாக இருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்களை முடிப்பது சிறிது தாமதம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் சிறிது அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.அரசாங்க உத்தியோகம் கைகூடி வரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் கண்டிப்பாக நடந்துகொள்வார்கள். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணத் தடை நீங்கி உறவினர்கள் மூலம் நல்ல வரன் கைகூடி வரும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சு முதலிடத்தில் இருக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தால் சிறிது மனஸ்தாபம் ஏற்படக்கூடும். கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வழக்கம் போலவே இருக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமையும். தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும். சிலருக்கு தேவையான பணம் கிடைப்பதுடன் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். நீண்ட நாளாக சந்திக்காத நண்பர்களை இன்று சந்திப்பீர்கள்.அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.