இன்றைய ராசிபலன் 12-06-2020

Rasi Palan

மேஷம்
Mesham Rasi

மேஷராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்களுடைய உறவினர்கள் வழியாக எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். அலுவலகப் பணியில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சற்று சுமாரான தினமாக தான் இருக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்தத் தொழிலில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். நிலுவையில் இருந்து வந்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை இன்று முடிப்பீர்கள். அலுவலகப் பணி எப்போதும்போல் செல்லும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. பணவரவு சீராக இருக்கும். சேமிக்க மறந்துவிடாதீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சுப காரியங்கள் தொடங்க பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளை அனுசரித்து பேச வேண்டும். சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால், எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையோடு கையாள்வது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்கள், இன்றைக்கு நீங்களே எதிர்பாராத மகிழ்ச்சியான செய்தி உங்கள் செவிகளுக்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நடத்த முடியாத ஒரு காரியத்தை இன்று செய்து முடிக்கப் போகிறீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்பட்டு, அலுவலகப் பணியை விரைவாக முடித்து, பாராட்டைப் பெற போகிறீர்கள். இதனால் சற்று தலைகணம் அதிகரிக்கக்கூடும். பொறுமையோடு பேசுங்கள். வெற்றி பெறும் சமயத்தில் அடக்கம் அவசியம் தேவை என்பதை மறக்காதீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சற்று மன குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். யாரை நம்பியும் பணம் கொடுக்கவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம். உங்களது பொருட்களை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக அலுவலகப் பணியில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தைரியத்தோடு புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். கட்டாயம் வெற்றி உண்டு. பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். வியாபாரம் முன்னேற்றத்தில் செல்லும் அலுவலக பணியில் பாராட்டை பெறுவீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அதிகரிக்க போகின்றது என்றே சொல்லலாம். சேமிப்பை மறந்துவிடாதீர்கள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட போகிறீர்கள். ஆரோக்கியத்தை மட்டும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முன்கோபத்தை மட்டும் குறைத்துக்கொள்வது நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரைய செலவு ஏற்படலாம். பணப்பற்றாக்குறை வர வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். விரைவில் கஷ்டங்கள் தீர வாய்ப்பு உள்ளது. முழுமனதோடு இறைவழிபாடு செய்யுங்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிகாரர்களுக்கு இன்று சற்று சோம்பேறித்தனம் தலைதூக்கும். முடிந்தவரை அலுவலகப் பணியை சுறுசுறுப்போடு முடிக்கப் பாருங்கள். மேல் அதிகாரிகளிடம் இருந்து திட்டு வாங்காமல் தப்பித்துக்கொள்ள சோம்பேறித்தனத்தை விட்டுத்தான் ஆகவேண்டும். சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்கள், உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவது நல்லது. தொழில்ரீதியாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அலுவலகப் பணியில் யாரை நம்பியும் எந்த பொறுப்பையும் ஒப்படைக்காதீர்கள். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.