Rasi Palan Today : இன்றைய ராசி பலன் – 13-02-2019

12-rasi
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்யவேண்டி வரும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரவகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். அவர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

உற்சாகமான நாளாக அமையும். ஆனால், புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கன்னி:
Kanni Rasi

பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். பிள்ளைகள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் எதிர்பார்த்ததைவிட குறைவாகத்தான் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் தன்னம்பிக்கை, தைரியத்துடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:
virichigam

தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

தெய்வபக்தி அதிகரிக்கும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.

மீனம்:
meenam

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -