இன்றைய ராசி பலன் – 13-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்துவிடுவிகள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

ரிஷபம்:
rishabam

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். இன்று அலைச்சல் அதிகமாக காணப்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தாய்மாமன் வழியில் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் சிறுசிறு மனக்கசப்பு ஏற்படும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மிதுனம்:
Midhunam
உற்சாகமான நாள். கணவன் மனைக்குள் அன்பு அதிகரிக்கும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். இன்று குழப்பத்துடன் காணப்படிவீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் எதிர்பார்த்த படியே அமையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை கவனம் தவிர்த்து கொள்ளுங்கள்.

கடகம் :
Kadagam
சகோதரர்கள் உங்கள் தேவைக்கேற்ப நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். குடும்பத்தாருடன் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் இன்று மந்தமாகத்தான் இருக்கும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிச்சியான நாளாக அமையும்.

சிம்மம்:
simam
புதிய முயற்சிகளை ஈடுபட வேண்டாம். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். தெய்வ பிராத்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமையால் சற்று சோர்வாக இருப்பிர்கள். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். மாலையில் பள்ளி அல்லது கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் கூடுதலாக அமையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்:

உற்சாகமாக காணப்படுவீர்கள். அலைச்சலை தவிர்த்து கொள்ளுங்கள். புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்துவிடுவீர்கள். தாய்மனன் வழியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட கூடுதலான விற்பனை இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:

       மாசி மாத ராசி பலன்

- Advertisement -

விருச்சிகம்:

அனுகூலமான நாள். உங்கள் விருப்பதிற்கேற்ப புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவியால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். தாய்வழி உறவுகளால் நண்மை உண்டாகும். அலுவலகம் பணிச்சுமையால் கூடுதல் நேரும் வேலை பார்ப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். குடும்பத்தாருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வியாபரம் வழக்கம் போல் காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

மகரம்:
magaram
குடும்பத்தினர்கள் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்விர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள், எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வீட்டு விஷசங்களுக்கு செல்விர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களின் பொது கவனமாக இருங்கள்.

கும்பம்:

இன்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபடாதீர்கள். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். அலுவலகயத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலமான நாள்.

மீனம்:

உற்சாகமான நாள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வீண் அலைச்சலை தவிர்த்து கொள்ளுங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் பிரச்சனை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியல் ஆதாயம் ஏற்படக்கூடும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -