Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13/06/2019): அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

சகோதரர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:
Rishabam Rasi

சிலர் வெளியூர் பயணம் செய்து, அங்கிருக்கும் கோயில்களை தரிசிக்க வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் மூலம் செலவு ஏற்படும். வழக்கமான வேளைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலக வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பிர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi

காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் வழி உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றியும் எதிர்பாராத பண லாபமும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். விசாகம் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:
virichigam

இன்று மகிழ்ச்சியானா நாள். பெற்றோரிடம் இருந்து நல்ல செய்தி வரும். சில விசயங்களை யோசித்து முடிவெடுப்பது நல்லது. வீண் அலைச்சலுகைளை குறைத்து கொள்ளுங்கள். அலுவலக பணிகளில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் லாபமும் இருக்காது நஷ்டமும் இருக்காது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி ஏற்படும். கொடுத்த கடன் திரும்ப வரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாகக் காணப்படும். உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்:
meenam

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகை யால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -