இன்றைய ராசி பலன் – 13-07-2020

rasi palan - 13-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். நீங்கள் இன்று புது முயற்சிகளில் ஈடுபட்டால் அது நஷ்டத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் வழக்கம் போலவே இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மற்றவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது மிகவும் நல்லது. பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். வாழ்க்கைத்துணை உறவினர்களின் மூலம் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைகிறது. நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தந்தை வழி உறவினர்களில் மூலம் உதவிகள் கிடைக்கும்.தொழிலில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் வந்து சேரும். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளால் சற்று அலைச்சல் ஏற்படும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். உறவினர்களிடம் இருந்து செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கலந்து பேசி அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை தேவை. இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவர்களால் சிறுசிறு பிரச்சினைகளும் வந்து சேரும். நண்பர்களிடம் பேசுவதால் ஆறுதல் உண்டாகும். சொந்த தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். குடும்ப தொடர்பாக இன்று முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் கூடுதலாக பணியாற்றுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத முறையில் பணம் வந்து சேரும். குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளைப் அறிந்து நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு இருப்பதால் லாபம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் அதனால் பொறுமையாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக காணப்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கக் கூடும். தேவையான பணம் கையில் இருந்தாலும் வீண் செலவுகள் ஏற்படும். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு உங்கள் வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்கள். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத முறையில் பணம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் உற்சாகம் ஏற்படக்கூடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்டநாள் பார்க்காத நண்பர்கள் இன்று பார்க்க நிகழும். பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த படியே இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -