இன்றைய ராசி பலன் – 13-09-2020

rasi palan - 13-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் கிடைக்க கூடிய அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் இணக்கமாக இருப்பது முன்னேற்றத்தை தரும். குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தைத் தரும் அமைப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாக முடியக்கூடும். உங்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்க கூடிய வகையில் மற்றவர்கள் நடந்து கொள்வார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கக் கூடிய அற்புதமான அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பத்திரிக்கை மற்றும் கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள நேரலாம். ஒரு சிலருக்கு வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலனை தரும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருப்பதால் எச்சரிக்கை தேவை. குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளால் சில மனக்கஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சனி பகவான் வழிபாடு செய்து வருவது ஏற்றத்தைத் தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. உங்களை சுற்றியிருக்கும் நபர்களால் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படக்கூடும். எனினும் பொறுமையுடன் கையாளுவது மிகவும் நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்களின் உதவியினால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பெண்கள் இறை வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் முடிவில் உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையும். உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாற்றங்கள் நிகழக் கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்பு விஷயங்கள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அமைப்பு என்பதால் துணிச்சலுடன் எந்த ஒரு முடிவையும் எடுக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வழி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான மனநிலையை தரும். உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலைத்து இருக்கும். சுபகாரிய முயற்சிகள் சாதகமான பலன் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். அரசமரத்தடி பிள்ளையாரை வணங்குவது சிறப்பு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -