இன்றைய ராசி பலன் – 13-10-2020

rasi palan - 13-10-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. வீட்டிற்கு போதிய பணவரவு இருப்பதால் பொருளாதார பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். அவர்களுக்கு அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கால தாமதம் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வருமானம் இருக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எக்காரணம் கொண்டும் வாக்குவாதங்களில் யாரிடமும் ஈடுபடாதீர்கள். உங்களின் கருத்திற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் மௌனமாக இருப்பது நல்லது. கூடுமானவரை உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் நஷ்டம் ஏதும் ஏற்படாது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் எதிலும் ஈடுபட கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் உண்டாகும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் வேடிக்கையான பேச்சால் அனைவரையும் மகிழ்ச்சிக்கு ஆளாக்குவீர்கள். தன்னம்பிக்கையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் சாத்தியக்கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் கவனமுடன் இருப்பது அவசியம். செய்யும் வேலையில் சோர்வும், தொய்வும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கப் பெறும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் காண முடியும். நண்பர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையேயான புரிதல் அதிகமாக வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த தொய்வு மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணமுடியும். நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதனை சோதிக்கும் படியாக நிகழ்வுகள் நடக்கலாம். எச்சரிக்கை தேவை.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை சாதக பலனை கொடுக்கும். இதுவரை நீங்கள் அதிகம் நம்பிய ஒருவர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஞானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதிக்க கூடிய அற்புதமான நாளாக அமைகிறது. நீண்ட நாள் இழுபறியில் இருந்த நிலுவை தொகைகள் தடையின்றி வசூலாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். உங்களுடைய பலவீனத்தை தெரிந்து கொண்ட சிலர் உங்களுக்கு எதிராக செயல்பட நேரலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட புது விஷயங்கள் லாபம் தரும். உத்தியோகத்தில் ஈடுபடு உத்வேகம் காணப்படும். எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் காணப்படும். உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழும். நீண்ட நாள் நண்பர்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வீடு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சுய தொழில் புரிவதற்கு அடித்தளம் தீட்டுவீர்கள். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சுய தொழிலை அதிகம் விரும்பும் நீங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். நினைத்ததை முடிக்க கால பைரவரை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.