இன்றைய ராசி பலன் – 13-12-2020

rasi palan - 13-12-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகள் அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். விநாயகரை வணங்கி வர நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியில் பயணிக்கக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் செய்பவர்கள் ஏற்றம் காணலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு ஊடல்கள் வந்து மறையும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். கூடுமான வரை பொறுமை காப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். சுயதொழில் புரிபவர்கள் தொழில் ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை தடுத்து தள்ளிப் போடுவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றியான நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சற்று டென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் புரிபவர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சை குறைத்து வேலையில் மட்டும் கவனத்தை செலுத்தினால் மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உருவாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியான பணவரவு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபமும் அதிகரிக்கும். பெண்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறைவழிபாடுகள் மூலம் அமைதியை உண்டாக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். புதிய வேலைவாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று அலைச்சலும், சோர்வும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் வெற்றிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் மூலம் ஆதாயம் காணலாம். சுயதொழில் புரிபவர்களுக்கு உங்களுடைய சாதுர்யமான குணத்தால் சிறப்பான முன்னேற்றம் உண்டு.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் பெறும் நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரம் புரிபவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். நண்பர்களுடன் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் நிதானம் மற்றும் நேர்மையை கடைபிடிப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற வைபவங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு எதிர்பார்த்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். விசேஷ செய்திகள் கிடைக்கப் பெறுவதால் மனம் அதிலும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் பண வரவு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எண்ணிய எண்ணம் எல்லாம் உயரக் கூடிய அற்புதமான அமைப்பு.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். பேச்சில் நிதானத்தை மற்றும் சாதுர்யத்தை கடைபிடிப்பதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -