இன்றைய ராசி பலன் – 13-4-2020

rasi palan - 13-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நாள் ஆகும். நிர்வாகத்தின் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். வாகனம் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். சொந்த தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான காரியங்களை துவக்க நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் மனதில் எழும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மன மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை பளு இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நாளாகும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும். சீருடை பணியாளர்கள் பத்திரிகை துறை எழுத்துத் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் மகிழ்ச்சி அளிக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மாலையில் நல்ல செய்தி கிடைக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு மேன்மையான நாளாக அமையும். வெளிநாடுகளில் பண வரவை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தருவதாக அமைய போகிறது. சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருந்துவரும். கணவன் மனைவி உறவு அந்நியோன்னியமாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் நாளாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் எல்லாம் புது முயற்சிகளில் வெற்றி அடையும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். நீதி நிர்வாகத்தை நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதப் படுத்த பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். செய் தொழில் மேன்மை அடைவீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். மனைவி உறவுகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி சற்று கூடுதல் கவனம் தேவை.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஒற்றுமைக்கு பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை உண்டாகலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வயதானவர்களுக்கு உடல்நலத்தில் சிறு சிறு தொல்லைகள் ஏற்படும். வார்த்தையில் நிதானம் தேவை. பிரிவினையை எதிர்நோக்கி உள்ள குடும்பங்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விதமாகவே காரியங்கள் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாளாக அமையும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். எதையும் சிந்தித்து ஆலோசனை செய்து நடப்பது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.