இன்றைய ராசி பலன் – 13-5-2020

rasi palan - 13-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியளிக்கக் கூடிய நாளாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் காரியங்களில் வெற்றியை தரும். சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு லாபம் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். எந்த செயலை செய்தாலும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமாக காணப்படும். சுயதொழில் புரிபவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நினைத்தப்படி லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு மந்த நிலை இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. பெரியோர்களின் உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும். தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். பண வரவு உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் அளிக்கக்கூடிய வகையில் அமையும். உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை இருந்து வந்த கடன் தொகை படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது. பெற்றோர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து நடப்பது மிகவும் நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்களே கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றில் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்தபடி லாபம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வெகுநாளாக வேலை இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய கூடும். பூர்வீக சொத்துக்கள் போன்ற விஷயங்களில் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள். வியாபாரத்தில் சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. பணத்தை செலவிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும். ஆரோக்கியமான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்ச்சிகளும் நிம்மதியை தரும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களே கிடைக்கும். முன்னேற்றத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களின்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டைகள் சச்சரவுகள் ஏற்படும். தொழிலில் ஒரு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கூடுதலான எச்சரிக்கை தேவை.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மிகவும் நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தேவையற்ற சண்டைகள் உருவாகலாம். எடுக்கும் முயற்சிகளில் தோல்வியை தரும். உங்களுடைய மன தைரியத்தால் எதையும் சாதிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றங்களை சிறப்பாக இருக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் ஆடம்பரத்தை குறித்துக் கொள்வது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.