இன்றைய ராசிபலன் 13-06-2020

Rasi Palan
- Advertisement -

மேஷம்
மேஷராசிக்காரர்கள் இன்று குடும்பத்தோடு, சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். முடிந்த வரை எந்த ஒரு முக்கியமான முடிவையும் இன்று எடுக்க வேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய தாக இருந்தால், ஒன்றுக்குப் பல முறை பல பேரிடம் ஆலோசித்து எடுப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சற்று சுமாரான தினமாக தான் இருக்கப் போகின்றது. வீட்டின் விருந்தினர்களின் வருகையால் வீண் விரையம் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகப் பணியில் உங்களது பிரச்சனைகளை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அதிகரிக்க போகிறது என்று சொல்லலாம். கடன்தொகை வசூலாகும். எதிர்பாராமல், வராது என்று, நினைத்துக் கொண்டிருந்த உங்கள் சம்பளம் உங்கள் கைகளுக்கு வந்து சேரலாம். ஆக மொத்தத்தில் உங்களது பாக்கெட் நிறைய போகின்றது. சந்தோஷமான தினம் தான்.

கடகம்
கடகராசிக்காரர்களுக்கு இன்று சற்று சுமாரான தினமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்தால், வெற்றியடைய முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை எடுக்கும் வேண்டாம். அலுவலகப் பணியை சுறுசுறுப்பாக முடிக்கப் பாருங்கள். இல்லையென்றால் தேவையில்லாத திட்டு வாங்கவேண்டியிருக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று, சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் தொடங்கலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கப் போகின்றது.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக முடியாமல் இருந்து வந்த ஒரு காரியத்தை முடித்து வைக்கப் போகிறீர்கள். மனநிறைவோடு இருப்பீர்கள். சொந்தத் தொழிலில் அதிக லாபம் உண்டு. கடவுளுக்கு நன்றி சொல்லும் மறக்க வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மன தைரியத்தோடு புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். எடுத்த காரியம் வெற்றி அடையும். எதிலும் தடுமாறாமல் முடிவு எடுக்க பழகுங்கள். தடுமாற்றம் தோல்வியை தந்துவிடும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் காட்டுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகரிக்கப் போகின்றது. சுறுசுறுப்பாக அலுவலகப் பணியை முடித்து, நல்ல பெயர் வாங்க போகிறீர்கள். சொந்தத் தொழில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், நஷ்டம் ஏற்படாது. உறவினர்களின் வருகையால் வீட்டில் சின்ன பிரச்சினை வரலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சற்று சுமாரான தினமாகத்தான் இருக்க போகின்றது. புதியதாக எந்த பொருட்களை வாங்குவதாக இருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். முடிந்தவரை பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் தரக்கூடிய நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்கலாம். பதவி உயர்வு கிடைக்கலாம். முன்னேற்றப் பாதைக்கு செல்ல நல்ல வாய்ப்பு உங்களை தேடி வரலாம். பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சற்று குழப்பமான நாளாகத்தான் இருக்க போகின்றது. பிரச்சினைகள் எப்போதும் இருப்பது போல, ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும் அது கூடிய விரைவில் நல்ல முடிவுக்கு வரும். மன குழப்பம் வேண்டாம். இறைவழிபாடு செய்வது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சற்று அலைச்சல் இருக்கத்தான் செய்யும். ஆனால் உங்களது வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிடுவது நல்லது. கோபத்தையும் குறைத்துக் கொள்வது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -