இன்றைய ராசி பலன் – 14-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham

உற்சாகமான நாள். புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். சிலர் குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:
rishabam

தாய்யின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமவர்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் பயம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
Midhunam

அனுகூலமான நாள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

கடகம் :
Kadagam

தாய்வழியில் அனைத்து காரியங்களிலும் சுலபமாக முடியும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரார்த்தனைகளை வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

சிம்மம்:
simam
மகிழ்ச்சியான நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சகோதரர்களால் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட குறைவாகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

கன்னி:

குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலத்தில் பணிச்சுமை காரணமாக சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

பெற்றோர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிறகு விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

விருச்சிகம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணைவியின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

தனுசு:

தந்தைவழி உறவுகளால் வீண்செலவுகள் உண்டாகும். இன்று மனதளவில் குழப்பத்தில் இருப்பிர்கள். உங்கள் முயற்சிக்கு மனைவியின் ஒத்துழைப்புத் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை கூடுதலாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

மகரம்:
magaram
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதேசமயம் செலவுகளும் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகம் சார்ந்த பணிகளால் வெளியூர் பயணம் செய்விர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். வீண்செலவுகள் ஏற்படும். பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

மீனம்:

அனுகூலமான நாள். எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவன் மனைக்குள் அன்பு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மற்றவர்களின் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மாலையில் எதிர்பாராத வகையில் உற்சாகம் பெறுவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -