இன்றைய ராசி பலன் – 14-07-2020

rasi palan - 14-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி வந்து சேரும். எதிர்பாராத இடத்தில் பண வரவு ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடிவரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். எடுத்த காரியத்தை மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவி செய்வார்கள்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கூடுதலாக லாபம் அதிகரிக்கும். பெற்றோர்கள் உங்களிடம் அன்பு காட்டுவார்கள். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் மனக் குழப்பத்துடன் செய்வீர்கள். எடுத்த முயற்சிகள் அனைத்தும் நன்மையில் முடியும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உளைச்சல் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் தொழிலில் புதிய முயற்சிகளால் கவனம் தேவை. வேலைகளில் சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் அதை முடித்து விடுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைந்துள்ளது. தொழிலில் புதிய முயற்சிகள் செய்து லாபத்தை அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அன்பு காட்டுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயலில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் உறவினர்களிடம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் எதிர்பாராத பணம் உதவிகள் தேடி வரும். திருமணம் தடை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும். குடும்பத்துடன் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முயற்சியால் முன்னேற்றம் ஏற்பட்டு லாபம் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். பிள்ளைகளோடு இருந்த பிரச்சினைகள் தீரும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -