Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (14/08/2019): வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

மாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.

மிதுனம்:
midhunam

அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் நீங்கள் பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அலுவலக வேலைகளில் மிகவும் கவனத்துடன் ஈடுபடவும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

காரியங்கள் அனுகூலம் உண்டாகும். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்.

சிம்மம்:
simmam

நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். பிள்ளைகள் வகையில் பெருமைப்படக்கூடிய செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்:
virichigam

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். விசாகம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

மாலையில் விருந்தினர் வருகை உண்டு. அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தேவையான உதவிகள் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மகரம்:
Magaram rasi

தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

மாலையில் உறவினர்களுடன் பேசி மகிழும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:
meenam

குடும்ப விஷயமாக வெளியில் அலைந்து திரிய வேண்டி இருக்கும் நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -