இன்றைய ராசி பலன் – 13-09-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

mesham

உற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

- Advertisement -

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

rishabam

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குள் எடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சிலருக்கு குடும்ப விஷயம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:

Midhunam

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பொறுப்புகள் சற்று அதிகரிப்பதால் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

கடகம்:

Kadagam

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் பணம் வரக்கூடும்.

சிம்மம்:

அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

துலாம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கக்கூடும்.

விருச்சிகம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனுகூலமாக முடியும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:

magaram

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடனே சரியாகிவிடும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மீனம்:

நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

உங்களுக்கான இன்றைய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்

- Advertisement -