இன்றைய ராசி பலன் – 14-1-2020

rasi palan - 14-1-2020

மேஷம்:
Mesham Rasi
இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய நாளாக அமைய போகிறது. சுபகாரியப் பேச்சுகளை தொடங்கினால் சுமூகமாக முடியும். உற்றார் உறவினருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் செலவுகளை அதிகமாக செய்யாமலிருப்பது நல்லது. புதியதாக ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இன்றைக்கு வாங்குவது சிறப்பானது.

ரிஷபம்:
Rishabam Rasi
இந்த நாள் உங்களுக்கு பணவரவை தரக்கூடிய நாளாக அமைய போகிறது. நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் வாங்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். திருமண பேச்சுவார்த்தைகளை இன்றைய தினத்தில் தொடங்கினால் நல்ல முடிவு ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மிதுனம்:
midhunam
உங்களுக்கு வெற்றியைத் தரக்கூடிய நாளாக இந்த நாள் அமையப்போகிறது. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் இன்றைக்கு வெற்றிதான். சொந்தத் தொழில் புதியதாக முதலீடு செய்யலாம். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவில் சிறு தட்டுப்பாடு இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

கடகம்:
Kadagam Rasi
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகத்தான் அமையப்போகிறது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவிற்கு ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி படிப்பதற்கான நல்ல வாய்ப்பு உங்களை தேடி வரும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற நல்ல காரியங்களை இந்நாளில் தொடங்கலாம். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உங்களை வந்து சேரும்.

சிம்மம்:
simmam
இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய போகிறது. உங்கள் உடல்நிலையில் மட்டும் அக்கறை செலுத்துவது நன்மை தரும். வீண் அலைச்சல்கள் வேண்டாம். குடும்பத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணப்பற்றாக்குறை ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று தடுமாற்றம் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi
உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கப் போகும் நாளாகத்தான் இன்று அமையப்போகிறது. நீண்ட நாட்களாக செயல்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு காரியத்தை இன்று செயல்படுத்தி முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் வீட்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
இந்த நாள் உங்களுக்கு நன்மை தரக்கூடிய நாளாகத்தான் அமையப்போகிறது. உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்கள், இழுபறியாக இருந்துவந்த செயல்பாடுகள் இன்று ஒரு முடிவுக்கு வந்துவிடும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாடு செலுத்தவேண்டும். உயர்கல்வி படிக்க முயற்சி செய்பவர்களாக இருந்தால் சற்று நிதானமாக சிந்தித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.

விருச்சிகம்:
virichigam
நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாகத்தான் இது அமையப்போகிறது. உங்கள் மனதிற்குப் பிடித்த சம்பவம் நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தத்தில் சந்தோஷத்தின் உச்சிக்கு செல்ல போகிறீர்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2023 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

தனுசு:
Dhanusu Rasi
சந்தோஷம் தரக்கூடிய நாளாகக் அத்தான் இன்று உங்களுக்கு அமையப்போகிறது. படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும். வீட்டில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வந்து சேரும்.

மகரம்:
Magaram rasi
இந்த நாள் உங்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய நாளாகத்தான் அமையப்போகிறது. சொத்து விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரம். திடீரென்று வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சுபகாரியங்கள் தொடங்குவதாக இருந்தால் இன்று தொடங்கலாம். கணவன் மனைவியிடையே அன்னியூன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கும்பம்:
Kumbam Rasi
இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக தான் அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்கள் வெற்றியை அடையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அனாவசிய பேச்சு மட்டும் குறைத்துக் கொண்டால் போதும். பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

மீனம்:
meenam
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகத்தான் அமையப்போகிறது. உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நண்பர்களின் உதவியால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. உடன் வேலை செய்பவர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.