இன்றைய ராசி பலன் – 14-11-2020

Rasi-palan-new
- Advertisement -

மேஷம்
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

ரிஷபம்
இன்று எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற் கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையாக இருக்கவும்.

- Advertisement -

மிதுனம்
இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை விடுத்தது, வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்
எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்
நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உறவினர்களின் வரவும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

கன்னி
வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்
திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து நல்ல தகவல் வரும். செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க நேரும். பயணத்தின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு
தந்தை வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

மகரம்
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கும்பம்
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

மீனம்
உங்கள் மனைவியின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து அதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று எதிலும் சற்று பொறுமை காப்பது நல்லது.

- Advertisement -