இன்றைய ராசி பலன் – 14-12-2020

rasi palan - 14-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்கள் எல்லாம் நடக்குமா என்பதில் குழப்பங்கள் நீடிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்கள் நல்ல லாபம் காணப்படும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பெரிதாக பிரச்சனைகள் இருக்காது. குடும்பத்தில் அமைதி நிலவ வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய நன்மைகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் அமோக வெற்றி கிடைக்கும். இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் அதை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான மனநிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சந்திக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய ரீதியான தொந்தரவுகள் சந்திக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை. வாகன வீதியான பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணரீதியான விஷயத்தில் அடுத்தவர்களை நம்பாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவாக ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானம் தேவைப்படக் கூடிய அமைப்பாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் அமோக வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த விஷயங்கள் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் இருந்தாலும் வீண் விரயங்கள் ஏற்படாது. பெண்கள் இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவார்கள்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் தரும். ஒரு சிலருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான விஷயத்தில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். இல்லத்தில் மகிழ்ச்சி கரமான சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் கூடுதலாகும். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடைபெறும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் கவலையும் அதிகமாக காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.