இன்றைய ராசி பலன் – 14-2-2020

rasi palan - 14-2-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வழக்குகளில் சாதகமான பதில் வரும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். கல்விக்காக செலவுகள் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. வீண் விரயங்களை தவிர்த்து சுபச் செலவுகளை மேற்கொள்வதால் பலன் அடையலாம். பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை கிடைக்கப் பெறும். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. ஒரு சிலருக்கு நவீன வகை தொழில்நுட்பங்களை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். மனதிற்கு பிடித்தவர்களால் மனமகிழ்ச்சி உண்டு.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உயர்கல்வி பயில்வோருக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். சமூக சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கான சூழ்நிலை நிலவும். சமூகத்தின் மீது அக்கறை கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களால் மனமகிழ்ச்சி உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் காணப்படும். வீண் விரயங்கள் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்ததொரு நாளாக அமைந்திருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரின் பாராட்டை பெறுவீர்கள். உங்களின் கடின முயற்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மனதிற்கு பிடித்தவர்களால் சில ஆச்சர்யங்கள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டவர்களுக்கு வெற்றி கிட்டும். வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். திடீர் பயணங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமுடன் காணப்படும் நாளாக இருக்கும். அரசு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும். சக பணியாளர்களிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். எனினும் அதனால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொலைதூர பிரயாணங்கள் வெற்றியை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக தொடங்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமையோடு இருப்பது நல்லது. தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பிரயாணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை உயரும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நிலவும். நல்ல சூழ்நிலையில் மனம் விட்டு பேசுவது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை உண்டாகலாம். அரசு துறை தேர்வுகள் எழுதி இருப்போருக்கு நல்ல முடிவுகள் வந்து சேரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கூட்டு முயற்சிகள் பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஜாமீன் போடுவதில் கவனம் தேவை. வீண் அலைச்சல்களால் மன சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் கடின முயற்சியால் வெற்றிகள் குவியும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய மாற்றங்கள் செய்து முன்னேற்றம் காணலாம். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது சிறந்தது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கால தாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக தொடங்கவிருக்கிறது. மனதுக்கு பிடித்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகக்கூடும். உங்கள் திறமைக்கேற்ப பாராட்டுகள் குவியும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான மனோநிலை உருவாகலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஒருசிலருக்கு வெற்றி பெறும். கணவன் மனைவி உறவு பலப்படும். உத்யோகம் புரிபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு எதிர்பார்த்த படி திருப்திகரமாக அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். அரசுத்துறையில் நடைபெறவிருந்த காரியங்கள் எளிதில் முடிவடையும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் சுபமாக முடியும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். எனினும் கல்வியில் கவனம் கூடுதலாக வேண்டும். மனதிற்கு பிடித்தவர்களால் சில ஆச்சர்யங்கள் நடைபெறும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையலாம். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் உருவாகலாம். எச்சரிக்கை தேவை. பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும் சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வி நிலை மேம்படும். உயர்கல்வி படிக்க கூடியவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். பல முக்கிய முடிவுகளை பற்றிய சிந்தனையில் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மனதிற்கு பிடித்தவர்களால் சில நன்மைகள் நடைபெறும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். அரசு தொடர்பான விஷயங்கள் வெற்றிபெறும். நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள வேலைகள் நல்லபடியாக முடியும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களால் சில ஆச்சர்யங்கள் நடைபெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த சுபச் செய்திகள் கைகூடிவரும். வீண் விரயங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். குடும்ப நபர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் தென்படலாம். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். மனதுக்கு பிடித்தவர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் இனிய நாளாக இருக்கும். உடல்நலம் சீராக இருக்கும். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றியில் முடியும். தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -