இன்றைய ராசி பலன் – 14-5-2020

rasi palan - 14-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் அதனை சரிசெய்ய முயல்வார்கள். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசு பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக இருக்க வேண்டும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் வருமானம் உயரும். உறவினர்களின் வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நீண்டநாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரியமானவர்களை சந்திப்பு நிகழும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உங்களுடைய தீராத உழைப்பால் உயர்வீர்கள். உங்கள் சமர்பித்தால் வியாபாரம் வலுவடையும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களை எதிர்கொள்ளும் நாளாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பதவியில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பணத்தை கவனமாக இருப்பது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். நீண்ட நாளாக தடைப்பட்டுக் கொண்டிருந்த வேளை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரியை ஒத்துழைப்பாக இருப்பார். கடன் வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை செய்வதால் சோர்வுடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பணம் விஷயத்தில் யாரையும் நம்பாமல் இருப்பது மிகவும் நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மாணவர்கள் உயர்கல்வி படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். காதல் விஷயங்கள் சுமுகமாக முடியும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயல் செய்தாலும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சில வாக்குவாதங்கள் வந்து நீங்கும். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சமாளிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சி வெற்றியைத் தரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புது வீடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. உறவினர்கள் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் ஊழியர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். காரியத்தில் கருத்தாக இருப்பது நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில சங்கடங்கள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணவரவு திருப்தி தரும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆலயங்களுக்கு செல்வதால் மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும் ஆயினும் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகளை குறைத்துக் கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் நல்லது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியாக நடத்துவீர்கள். தந்தையிடம் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனைவியிடம் அன்பாக இருக்கிறீர்கள். தொலைதூரப் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். குடும்பத்திலும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது வெற்றியை தரும். எந்த ஒரு விஷயத்திலும் மன குழப்பமாக இருப்பீர்கள். குடும்பத்தில் அனுசரணையாக இருக்கும் குணம் கொண்டவர். வேலைச் சுமையை அதிகரிக்கக் கூடும். எதிலும் மனம் தளராமல் இருப்பது மிகவும் நல்லது. வீன் வாக்குவாதங்களால் சில சங்கடங்கள் வந்து நீங்கும். எதையும் சாதிக்கும் மனநிலை கொண்டவர்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.