இன்றைய ராசி பலன் 14-06-2020

Rasi Palan

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான தினமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாத விருப்பம் ஒன்று இன்றைக்கு, நிறைவேற வாய்ப்பு உள்ளது. கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிக்க போகிறீர்கள். மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்கும் அளவிற்கு இந்த நாள் அமையப் போகின்றது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்கள் சுறுசுறுப்போடு உங்களது செயல்பாட்டை தொடங்கப் போகிறீர்கள் பிள்ளைகளின் செயல்பாட்டால் மனநிறைவு ஏற்படும் கொஞ்சம் வீண் விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை செலவை கட்டுப்படுத்திக்கொள்ள பாருங்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு, உறவினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இருந்த பகை விலகவும் செய்யும். மனதில் சந்தோஷம் பிறக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்கள், இன்று உங்களுடைய செயல்பாட்டில் அதிகப்படியான கவனம் வைத்து, செயல்பட வேண்டும். யாரை நம்பியும் ஏமாந்து விடாதீர்கள். உஷாராக இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டாம். ஜாமீன் கையெழுத்தும் போடவேண்டாம்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாகத்தான் இருக்க போகின்றது. ஆனால், உங்களது மன பயத்தை விட்டுவிட்டு, மன தைரியத்தோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. உறவினர்களிடம் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்க்கவும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்கள் இன்று எல்லோரையும் அனுசரித்து செல்ல போகிறீர்கள். உங்கள் தலையில் கிரீடம் தான். எல்லோரும் புகழும்படி உங்களது செயல்பாடுகள் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நல்ல பெயர் வாங்கும் வாய்ப்பு உள்ளது. மன மகிழ்ச்சியான நாள் தான் என்று.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பது நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகளை தொடங்கலாம். பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் அவசியம் தேவை. கோபத்தை குறைத்துக் கொண்டு அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகளும் குறையும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான நாளாகத்தான் இருக்க போகின்றது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல செய்தி வந்து சேரும். சம்பள உயர்வு வரும். பதவி உயர்வு வரலாம். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களின் வேலையையும், சுலபமாக சேர்த்து, செய்து முடிக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு சீராக இருக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சற்று சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகலாம். வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்ளும் பட்சத்தில், பிரச்சினை பெரிதாக ஆகாது. பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. பயணங்களை தவிர்த்துக் கொள்ளவும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு இருக்க வேண்டிய நாள். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். யாரிடமும் கோபத்தோடு பேச வேண்டாம். முடிந்தவரை இறை வழிபாட்டில் மனதை ஏற்படுத்துவது நல்லது. சில விஷயங்களில் மௌனமாக இருப்பது நல்லது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சற்று அலைச்சல் அதிகமாக தான் இருக்கும். இருப்பினும் உங்களது வேலையை சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது. உங்கள் குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.