Rasi palan : இன்றைய ராசி பலன் – 15-05-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். தேவையான பணம் கிடைக்கும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சிக்கு இன்று சாதகமான முடிவு ஏற்படும். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்குச் சாதகமான பதில் வரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

சிம்மம்:
simmam

மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:
virichigam

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்கு இன்றைய ராசி பலன் படி குடும்ப விஷயமாக வெளியில் அலைந்து திரிய வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் வேண்டாம். மாலையில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக் கூடும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு நீங்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

மீனம்:
meenam

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களால் சில நல்ல திருப்பங்களும் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -