இன்றைய ராசி பலன் – 15-09-2020

rasi palan - 15-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமைப்பாக இருப்பதால் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களின் அயராத உழைப்பால் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் இதுவரை புரிந்து கொள்ளாத சிலர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தலைவலியாக மாறும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் இருக்கும். விநாயகரை வழிபட்டால் நல்லது நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் இந்த விஷயத்திலும் லாபம் காண்பீர்கள். ஒருசிலர் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை அடைவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார மற்றும் பண ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு தேவையில்லாத நபர்களை நம்பாமல் இருப்பது நல்லது. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் மறக்க கூடிய அளவிற்கு குதூகலத்துடன் அமைய இருக்கிறது. நண்பர்களினால் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரீதியான விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார பிரச்சினையை சீர் செய்ய முடியும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் எதிர்காலம் குறித்த பயமும், அவநம்பிக்கையும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதைப் பற்றிய கவலையும் கொள்ளாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தனிமையான சூழ்நிலையில் இருவரும் மனம் விட்டு பேசுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். பைரவரை வணங்கி வாருங்கள் நிம்மதி பிறக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாக்கு சாதுர்யம் மற்றும் திறமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். நினைத்ததை நடத்திக் காட்டும் தன்னம்பிக்கை மிக்க நாளாக சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் தடையின்றி கைகூடிவரும். பிள்ளைகள் மூலம் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறக் கூடும். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். பொருளாதார ரீதியில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஈசனை வழிபட்டு வாருங்கள் மன அமைதி கிடைக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தை தரும் அமைப்பாக இருப்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்களை பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்ற நிலையை பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நினைத்தபடி வேலை அமையும். பெண்களுக்கு எதிர்பார் நிறைவேறக்கூடிய அமைப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நடைபெறக்கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் நெகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இதுவரை இழுபறியில் இருந்து இவைகள் தடையின்றி வசூலாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் குறையும். லாபம் அதிகரித்து பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக அசதியுடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு எச்சரிக்கை உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் தடைபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. தொழில் மட்டும் அவர் வீதியான மறைமுக எதிர்ப்புகள் வலுவாகும் சாத்தியக் கூறுகள் உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து சிந்தித்து செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். எனவே பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் பாராட்டுக்கள். கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பு என்பதால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உற்றார் மற்றும் உறவினர்களின் வருகையால் குதூகலம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். கலைத்துறை மற்றும் இசைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

மீனம்
மீன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் தொகைகள் வசூலாகாத சூழ்நிலையில் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் பொறுமையாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் ஒருசிலருக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. முருக வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -