இன்றைய ராசி பலன் – 15-1-2020

rasi palan - 15-1-2020

மேஷம்:
Mesham Rasi
இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். செலவுகளை மட்டும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் மாணவர்களுக்கு அதிக ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi
இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகத்தான் அமையப்போகிறது. உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். சந்தோஷமான சூழ்நிலை உங்களை சுற்றி நிலவும். உங்களது வியாபாரத்தில் பங்குதாரர்கள் உங்கள் பேச்சினை கேட்டு நடப்பார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிப்பது நல்லது.

மிதுனம்:
midhunam
இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையோடு செயல்படும் நாளாக அமைய போகிறது. புதிய நட்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் சுறுசுறுப்போடு ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு செவி கொடுப்பார்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi
இந்த நாள் உங்களுக்கு சந்தோஷத்தை மட்டும் தரப்போகிறது. கடந்த நாட்களாக உங்கள் வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை மாறும். மாணவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது.

சிம்மம்:
simmam
உங்களின் மனது நிறைவோடு இருக்கும் நாளாக இன்று அமையப் போகிறது. உங்கள் வீட்டில் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுக்கு உங்களது உறவினர்கள் செவி சாய்ப்பார். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்துப் போவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி:
Kanni Rasi
இந்த நாளில் சந்தோஷமானது அதிகமாக இருந்தாலும் உடல்நிலையில் சற்று சோர்வு ஏற்படும். ஓய்வு அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படுங்கள். சொந்த தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவை பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய நாளாகத்தான் அமையும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். மாணவர்கள் அக்கறையோடு படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்களிடத்தில் பேசும்போது கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தினால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

விருச்சிகம்:
virichigam
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக தான் அமையும். பண வரவிற்கு எந்தக் குறைவும் ஏற்படாது. வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வெளிநாட்டுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பதில் வந்து சேரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

தனுசு:
Dhanusu Rasi
இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகத்தான் அமையப்போகிறது. வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் மட்டும் இந்த நாளில் எடுக்க வேண்டாம். சற்று யோசித்து முடிவு எடுப்பது நன்மை தரும். மற்றபடி உங்கள் சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இருக்காது. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.

மகரம்:
Magaram rasi
உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும் நாளாகத்தான் என்று அமையும். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உங்களை புகழ்ந்து பேசுவார்கள். உங்களது தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
மகிழ்ச்சியை தரக்கூடிய நாளாகத்தான் என்று அமையப்போகிறது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை நீங்கி சந்தோஷம் பிறக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். உங்கள் மனதிற்கு சந்தோஷம் தரும் படி ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மீனம்:
meenam
இறைவழிபாட்டில் உங்கள் கவனத்தை செலுத்தும் நாளாக இன்று அமையப்போகிறது. உங்களின் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சுபகாரிய பேச்சை தொடங்குவதாக இருந்தால் இன்று தொடங்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் செல்பவர்கள் கவனத்தோடு செல்ல வேண்டும்.