இன்றைய ராசி பலன் – 15-12-2020

rasi palan - 15-12-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கின்றது. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் சாதகப் பலன்கள் உண்டாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய திட்டங்களை தீட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். லாபங்கள் அதிகரிக்கும் கூடிய வாய்ப்புகளும் உருவாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் வெற்றியை நோக்கி பயணிக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த பணவரவு இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பேசும் பொழுது கனிவுடன் பேசுவது நல்லது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலனைக் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே முன் கோபத்தை குறைத்து பொறுமையை கையாள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பிரச்சினைகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். ஒரு சிலர் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க போராடுவீர்கள்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எளிதில் முடியக்கூடிய வேலை கூட சற்று கால தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பெண்கள் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை நிலவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் அதிகம் பொறுமையை கையாள வேண்டியது அவசியமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் மற்றும் அலைச்சல் ஏற்படலாம். மற்றவருடன் பேசும் பொழுது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற நிலை காணப்படுவதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் இணக்கமாக செல்வது மிகவும் நல்லது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணியாளர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் முன்னேற்றம் நிச்சயம். சகோதர சகோதரிகளின் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். லாபம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு முடிவை எடுக்க முன் பலமுறை ஆலோசிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் இலைகள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். இல்லத்தரசிகளுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -