இன்றைய ராசி பலன் – 15-3-2020

rasi palan - 15-3-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மிகச் சிறந்த வெற்றி காண்பீர்கள். அதற்கு உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் சிறந்த காரணமாக இருக்கும். உங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்கள் மூலம் நீங்கள் நன்மை பெறுவீர்கள். தாயின் அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் உயர்வு காண்பார்கள். உயர் பதவிக்கு காத்திருப்பவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் மூலம் லாபம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சுமாரான பலன்கள் கிட்டும். எல்லா விஷயத்திலும் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தொழில் செய்யும் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் மிகுத்த கவனம் செலுத்த வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். இந்தச் சூழல் உங்களுக்கு மன அழுத்தம் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் பல பணிகள் வரும் காரணத்தால் நீங்கள் ஒரே நேரத்தில் பல செயல்களை செய்வது போல செயல்பட வேண்டியிருக்கும். எனவே நீங்கள் உங்கள் கவனம் சிதறாத வகையில் செயல்பட வேண்டும். அப்பொழுது உங்கள் புத்தி கூர்மை அடையும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தால் எந்த சூழ்நிலையையும் ஜெயித்து விடுவீர்கள். குடும்ப வாழ்வைப் பொறுத்தவரை சில கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் உங்கள் குடும்பத்திற்கென்று நேரம் ஒதுக்க முடியாத சூழல் இருக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்ள நேரும். அதன் காரணமாக உடல் அசதி மற்றும் சோர்வு ஏற்படும். அதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவு செய்ய நேரும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் வண்ணம் சில விஷயங்கள் நடக்கும். நீங்கள் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துங்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதாரண பலன்களைக் காண்பீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை தெளிவான நீரோட்டம் போல அமைதியாக ஓடும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிறந்த ஆரோக்கியமான நிலையில் இருப்பார்கள். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் செலவுகளும் சிறிது அதிகமாக காணப்படும். எனவே உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். தொழில் ரீதியாக நீங்கள் நன்மை அடைவதற்கான வாய்ப்புகளும் இப்பொழுது கிட்டும். உடன் பணி புரிபவர்களின் தவறான அபிப்பிராயங்கள் மற்றும் தவறான புரிதல்கள் உங்கள் முயற்சிகள் மூலம் விலகும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புத்திசாலித்தானமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வெற்றி உங்களுக்கு எளிதில் கிட்டும். பல்வேறு பணிகள் ஒரே நேரத்தில் வந்து குவியும். எனவே நீங்கள் கவனமாக செயல்பட வேண்டியிருக்கும். ஒவ்வொரு பணியிலும் நீங்கள் கவனமுடன் செயலாற்ற வேண்டும். கூடுதல் வேலைகள் உங்களுக்கு பாரமாக தெரியும். பொருளாதாரம் பொறுத்தவரை சீராக இருக்க வாய்ப்பில்லை. ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். என்றாலும் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் இன்று சிறந்த அறிவாற்றலுடன் செயல்படுவீர்கள். நீங்கள் பணியிலேயே ஆழ்ந்து இருக்கும் காரணத்தால் குடும்பத்திற்கென்று குடும்ப உறுப்பினர்களுக்கென்று உங்களால் நேரம் ஒதுக்க இயலாது. இதனால் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் விருப்பப்படி ஒரு சொத்தை வாங்குவீர்கள். அன்றாட நடவடிக்கைகளில் உங்களுடைய தீவிரமான ஈடுபாடு, எல்லோரையும் ஈர்த்து உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு மிகச் சரியான நேரம். இன்று உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். வேலையில் உங்கள் மதிப்பை நிரூபித்து நீங்கள் எதிர்பார்த்த சாதகமான முடிவுகளையும் பெறுவீர்கள். உங்களுடைய உற்பத்தித்திறன், நீங்கள் விரும்பிய உயர்ந்த நிலை அல்லது அந்தஸ்தை உங்களுக்கு பெற்றுத் தரும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாகரீகமான பொருட்களில் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான பலன்கள் தான் நடைபெறும். உடல் நலனில் அக்கறை தேவை. பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியில் பலன்களை அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்கும். மனைவியின் உடல் நிலையில் கவனம் தேவை. சிறு சிறு கஷ்டங்கள் இடையிடையே வந்து போகும். தந்தையின் உடல் நலம் நலமாக இருக்கும். தொழில் சாதாரணமாக நடைபெறும். செய்யும் தொழிலில் லாபங்கள் தடைபடும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் ஏற்படும். மனைவியின் உடல் நிலையில் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும் என்று கூறலாம். இருந்த போதிலும் ஒரு சிலர் சற்று மந்த நிலையை சந்திப்பீர்கள். இந்த நாளில் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும். குடும்ப உறவுகள் சாதகமாக இருக்கும். இளைய சகோதரர் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் தந்தையின் உடல் நிலை முன்னேற்றம் காணும். சிலர் உல்லாசப் பயணங்கள் செல்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் நன்மை பெறுவீர்கள். தொழில் துறையில் இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் அதிக லாபம் சம்பாதிபீர்கள். பணி புரியும் பெண்கள் உயர் பதவி பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் திருமணத்தின் மூலம் பலமடையக் காண்பார்கள். ‌சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத காரணத்தால் நீங்கள் சோர்வு அடையலாம்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மையும், தீமையும் கலந்த பலன்கள் காணப்படும். இது நாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் தீரும். மனதில் ஓரளவு நிம்மதி பெருகும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பொருளாதார சிக்கல்கள் உண்டாகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில பிரச்சினைகள் வந்து போகும். உங்கள் மனதில் ஆன்மீக எண்ணம் பெருகும். வெளியூரில் உள்ள ஆலயங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். உங்கள் மனதில் தைரியம் கூடும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நீங்கள் நன்மைகளைப் பெறலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக திட்டமிடுவதுடன் உங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும் செய்வீர்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். நீங்கள் எந்த ஒரு வேலையையும் மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்வீர்கள். உங்கள் பேச்சிற்கு உங்கள் குடும்பத்தில் மதிப்பு இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையையும் பிறர் ஒத்துழைப்புடன் உங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவடையக் காண்பீர்கள். அதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் செயல் திறன் அதிகரிக்கும். உங்களுக்கு மதிப்பும் கௌரவுமும் கிட்டும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் காலக் கட்டமாக உங்களுக்கு அமையும். எனவே தொடர்ந்து முயலுங்கள். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பிறருடனான உங்கள் உறவு முறை சிறப்பாக இருக்கும். குறிப்பாக உங்கள் தாயுடன் இத்தனை நாட்கள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுமூகமான உறவு முறை அமையும். உறவினர்கள் மூலம் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். என்றாலும் உங்கள் இளைய சகோதரரிடம் சிறிது கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர் மூலம் உங்களுக்கு வாழ்வில் சில பிரச்சினைகள் அல்லது நஷ்டங்கள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். மனதில் ஏதோ இனம் புரியாத கவலை உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வேகத்தை விட விவேகமும், பொறுமையும் அவசியம்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிதமான பலன்களை தரும். தன வரவு நன்றாக இருக்கும். தொழில் துறையில் அதிகமான உழைப்பும், கடுமையான முயற்சியுடனும் லாபங்களை பெறுவீர்கள். இருந்தாலும் சிறுது மந்தமாகவும் காணப்படும். இளைய சகோதரனால் நன்மைகள் ஏற்படும். தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையும். காதல் விவகாரங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகள் வர வாய்ப்பு அதிகம். கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தகப்பனாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வகையில் லாபம் உண்டாகும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்கள் மனதில் ஆன்மீக எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். ஆன்மீகப் பயணங்களும் மேற்கொள்வீர்கள். பெரியவர்களின் ஆசியும் வழி காட்டுதலும் உங்கள் வாழ்க்கைக்கு சிறந்த வழி காட்டும். நீங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் நீங்கள் சாதாரண பலன்களையே காண முடியும். அண்டை அயலார் மற்றும் சமூகத்துடன் நீங்கள் சிறந்த முறையில் உறவாடுவீர்கள். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தொழில் செய்பவர்கள் தங்களின் மதிப்பை நிரூபிக்க சிறந்த வாய்ப்பினை அளிக்கும் நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். நீங்கள் உங்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முறையான உணவு மற்றும் முறையான தூக்கம் மேற்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.