இன்றைய ராசி பலன் – 15-5-2020

rasi palan - 15-5-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலவகையிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமான முடிவை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மூலமாக பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வழக்கம் போல இருக்கும். நீண்டநாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும். மனைவிவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது நல்லது. உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது. வியாபாரத்திற்காக வியாபாரிகள் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உறவினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும். முதலில் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கக் கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. தாயாரின் உடல்நலனில் கவனம் இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவீர்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. ஆனாலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் வெற்றி தரும். முக்கிய முடிவை எடுப்பதற்கு உகந்த நாளாக அமையும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் கற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சகோதரங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் சுமுகமாக முடியும். பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்படவேண்டிய மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வீண் செலவுகள் ஏற்படக்கூடும் வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். பணியாளர்களால் சில பிரச்சினைகள் வரக்கூடும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை தரும். சகோதரர்களால் வீண் விவாதங்கள் ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வது நிம்மதியை தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெளிவாக சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. குடும்ப தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாக அமையும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப பிரச்சினைகள் இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் சுமாராகத்தானிருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கப்பெறும். பெற்றோரை மதித்து நடப்பது போல நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். முக்கிய முடிவு எடுக்க அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் உதவி கிடைக்கும். நீண்டநாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை தவிர்க்கவும். நண்பர்களால் பண உதவியும் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. அரசாங்கம் காரியங்கள் இழுபறியாகும். உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியை உண்டாக்கும். நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்க கூடும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்ல பலனை தரும். எதிலும் ஜெயம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்கும் நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். இளைய சகோதரர்கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தெய்வ வழிபாடு நல்ல பலனைத்தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். வியாபாரத்தில் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பாக நடந்து கொள்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. நீண்டநாளாக தொடர்பில்லாத நண்பர்கள் காணும் வாய்ப்புகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். சிலருக்கு செலவுகள் அதிகரிக்கக் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடனும் நிதானமுடன் செயல்படுவது நல்லது. மறைமுக விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மனைவிவழி உறவினர்களுடன் அனுசரணையாக இருப்பது நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. சுயதொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வீண் விவாதங்கள் தவிர்க்கவும். பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -