இன்றைய ராசி பலன் 15-06-2020

Rasi Palan

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவியிடம் வாக்குவாதம் வேண்டாம். உங்களுடைய வியாபாரத்திற்கு பங்குதாரர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அது சரியாகிவிடும். ஆனால், பண பரிமாற்றத்தில் உஷாராக இருக்க வேண்டும். முடிந்தவரை பயணத்தை தவிர்த்து கொள்ளுங்கள். உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வழக்கு முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது மட்டும் சற்று கவனம் தேவை.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அதிகமாக வந்தாலும், அதை விட அதிகமாக செலவு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சேமிக்க மறக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையில்லாத மன சஞ்சலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமாக நாளாகத்தான் இருக்க போகின்றது. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். சம்பள உயர்வு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புது யுத்திகளை கையாண்டு வெற்றியும் அடையப் போகிறீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. உறவினர்களின் வருகையால் வீட்டிற்கு சுபச் செய்தி வந்து சேரும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். குலதெய்வ வழிபாட்டை செய்வதன்மூலம் சந்தோஷம் அதிகரிக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. யாருடனும் நீங்கள் சண்டைக்கு போகவில்லை என்றாலும், பிரச்சனைகள் உங்களை தேடி வரும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். முடிந்தவரை பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோம்பேறித்தனமாக இருக்கப் போகின்றது. எடுத்த காரியத்தில் வெற்றி கொஞ்சம் இழுபறியாக இருக்கும் என்பதால், மன சஞ்சலம் ஏற்படும். எல்லாம் சரியாகிவிடும். இரண்டு முறை தோல்வி ஏற்பட்டாலும் மூன்றாவது முறை வெற்றி காண்பீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமாக நாளாகத்தான் இருக்க போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அலுவலகத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் நல்ல முன்னேற்றத்தோடு செல்லும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களது திறமை வெளிப்பட போகின்றது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் அடைவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய நண்பர்களிடம் ஜாக்கிரதையாக பேச வேண்டும். முடிந்த வரை உங்களது குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்கள் இன்று செலவை சமாளிக்க சற்று கஷ்டப்படுவீர்கள். நிலைமை போகப் போக சரியாகிவிடும். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து இருப்பீர்கள். அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழில் எப்போதும்போல் செல்லும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.