இன்றைய ராசி பலன் – 16-01-2018

12-rasi

மேஷம்:
mesham
சகோதரர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:
rishabamகாலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. பிற்பகல்வரை வேலைச்சுமை இருந்தபடி இருக்கும்.. மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:
தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கடகம் :

இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

- Advertisement -

சிம்மம்:
simam
இன்று வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி:

பிற்பகல்வரை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் மனதில் சோர்வு உண்டாகும். குடும்பத்தில் உறவினர்களால் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவும்.

துலாம்:

உற்சாகமான நாள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் அனுபவப்பூர்வமான ஆலோசனை பெரிதும் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:

உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

மகரம்:
magaram
உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். தந்தை வழி உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அதனால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாலையில் நண்பர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்லவும் நேரிடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

கும்பம்:

இன்று தேவையான பணம் இருப்பதால், திடீரென ஏற்படும் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

மீனம்:

காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் அனுகூலம் உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடம், ஆன்மீகம் என அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.