இன்றைய ராசி பலன் – 16-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham

அனுகூலமான நாள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

ரிஷபம்:
rishabam
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேர தாமதமாகும். பிள்ளைகளின் தேவைகளை புத்தி செய்விர்கள். அலுவலகம் பணிகளால் சோர்வாக காணப்படுவீர்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மிதுனம்:
Midhunam
மன உறுதியுடன் இருப்பிர்கள். எடுத்த காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். உடல் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். சிலர் குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உணவு விசயத்தில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்.

கடகம் :
Kadagam
அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும், பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை நம்பி பொறுப்பாகள் தர வேண்டாம். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிதானமாக செயல் படவேண்டிய நாள்.

சிம்மம்:
simam
சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் மலையில் தொடங்குவது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணம் வந்து சேர தாமதமாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். அலுவகத்தில் பணியாளர்கள் உதவியுடன் பணியை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்:

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சிலருக்கு உடல் நல குறைபாடுகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மாலையில் பிள்ளைகளுடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்விர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

விருச்சிகம்:

தந்தை வழியில் உதவி கேட்டு வருவார்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும்,பங்குதாரர்களால் நன்மை உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

தனுசு:

வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். மன உறுதியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாக நிறைவேறும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

மகரம்:
magaram
மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்துடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகம் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பணம் வந்து சேரும். குடும்பத்துடன் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடிவுகள் எடுங்கள். அலுவலகத்தில் பணியாளர்களுடன் அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். மாலையில் பள்ளி அல்லது கல்லுரி நண்பர்களை சந்திப்பீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நல்ல செய்தி வந்து சேரும்.

மீனம்:

புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சிலர் குடும்பத்துடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வள்ளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பயணங்களை தவிர்ப்பது நல்லது.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -